காற்றுடன் கூடிய மழையு காலநிலை; பொதுமக்கள் சிரமம்

(பாறுக் ஷிஹான்)

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று திடீரென காற்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியது.இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் நீரால் நிரம்பியுள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில் திடிரென மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் காற்றினால் முறிந்து விழுந்துள்ளன.