எருவில் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம்.

(எருவில் துசி)

எருவில் கிராமத்தில் இன்று (22) களுவாஞ்சிகுடி பொலிசாரினால் வடிசாராய விற்பனையாளர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சில வடிசாராய போத்தல்களும் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

எருவில் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு.அ.வசிகரன் அவர்களின் வழிநடத்தலில்  குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.