கிழக்கு மாகாணத்தில்  44 பேருக்கு   ஜனாதிபதி சாரணர் விருது மட்டக்களப்பில் நாளை பிரதான நிகழ்வு.

  கதிரவன்

இலங்கை சாரணர் சங்கம் 30 சாரணர் மாவட்டங்களைச் சேர்ந்த 748
சாரணர்களுக்கு ஜனாதிபதி சாரணர் விருது வழங்கி வைக்க உள்ளது.  இதன் பிரதான
நிகழ்வு இலங்கையின் பிரதம சாரணன்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ் தலைமையில்ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.

.   சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரிபுவின் பிறந்த தினத்திற்கு  அடுத்த
நாள் 2020.02.23 மாலை 3.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.  ஒவ்வாரு
மாவட்டத்தில் இருந்தும் விருது வென்ற ஒவ்வொரு சாரணர்கள் தெரிவு
செய்யப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதி விருதினையும் சான்றிதழையும் வழங்கி
வைக்க உள்ளார்.   சமகாலத்தில் மாகாண ரீதியில் அந்தந்த ஆளுநர் தலைமையில்
மாவட்ட சாரணர் ஆணையாளர்களின் ஒழுங்கமைப்பில் மாகாண விருது வழங்கும்
நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன..

ஜனாதிபதி சாரணர் விருதுகளை வென்றவர்களின் விபரம்  மாவட்ட ரீதியாக

கண்டி 105,
 நாவலப்பிட்டி 02,
அக்கரைப்பற்று கல்முனை 01,
அம்பாறை 06,
மட்டக்களப்பு 25,
திருகோணமலை 12,
அநுராதபுரம் 13,
பொலன்நறுவை 12,
யாழ்ப்பாணம் 14,
காங்கேசன்துரை 08,
மன்னார் 01,
பருத்தித்துறை 05,
வவுனியா 03,
சிலாபம் 03,
குருணாகல் 19,
அவிசாவளை 11,
கேகாலை 22,
இரத்தினபுரி 10,
காலி 63,
ஹம்பாந்தோட்டை 05,
மாத்தறை 28,
மொரட்டுவ  11,
பதுளை 05,
கொழும்பு 163,
கம்பஹா 42,
பாணந்துறை 32,
ஹோமாகம 15,
வத்தளை ஜா எல 52,

வருடாவருடம் நடத்தப்படும் இந்நிகழ்வு நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்று

காரணமாக 2 வருடங்கள் இடம் பெறவில்லை..

கிழக்கு மாகாணத்தில் 44 சாரணர்கள் இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள உள்ளனர்.
கிழக்கு மாகாண ஜனாதிபதி சாரணர் விருத வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி அனுரதா யகம்பதி  தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்தில் இடம் பெற உள்ளது.