கோவிட் – 19! சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.

 

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திரன் தலைமையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன் அவர்களின் வழிநடத்தலில் களுவாஞ்சிகுடி இராசாமாணிக்கம் மண்டபத்தில் இன்று(21) திங்கட்கிழமை தடுப்பூசி ஏற்றும் பணி நடைபெறுகின்றது.

நாட்டில் பரவி வரும் கொவிட்டில் இருந்து மக்கள் பாதுகாப்பு பெற வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி ஏற்றும் பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இச் செயற்பாடானது இன்று 03.00 மணிவரை நடைபெறவுள்ளதால் இதுவரை தடுப்பூசி ஏற்றதவர்கள் ஏற்றிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வைத்தியர்களின் ஆலோசனை மற்றும் தங்களுக்குரிய தப்பூசிகள் என்பன ஏற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.