நாட்டில் இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் மின்சாரத் தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், சனிக்கிழமை 15-20 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் கோரிக்கைக்கு மக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத்திற்கான தேவை குறையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.