பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்;  இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பினர் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் குறித்து பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு13 ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவது என்ற இலங்கை அரசாங்கங்களின் வாக்குறுதிகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்தது.

மேலும் தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது.