ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது.

இதற்கென கையடக்க தொலைபேசி செயலியொன்றை (Mobile App) தயாரித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

ஒன்லைன் ஊடாக கடனட்டையை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டினை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை மேம்படுத்தியதன் பின்னர் வீட்டிலிருந்தே மக்களால் ரயில் அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

எதிர்வரும் சில தினங்களில் அனைத்து ரயில் சேவைகளுக்குமான பயணச்சீட்டுகளை ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கமென ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்காக மாத்திரமே இந்த சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் புதிய கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தியதன் பின்னர் பயண அட்டை (Travel Card) மூலமாக செயற்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.