அரசாங்கம் சகலவிடயங்களிலும் தோல்வி கண்டுள்ளது; தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்!

( வி.ரி.சகாதேவராஜா)

அரசாங்கம் சகலவிடயங்களிலும் தோல்வி கண்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் மக்கள் பதிலளிக்கக் காத்திருக்கிறன்றார்கள். நானும் டெல்டா எனும் கொடிய தொற்றினால் பாதிக்கபட்டு குணமடைந்தது நீங்கள் அறிந்ததுதான்.இப்போது நாடு மீண்டும் வழமைக்குத்திரும்பிவிட்டதாக எண்ணிக்கொண்டே அரசாங்கம் செயல்படுகின்றது.ஆனால் அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் புதன் கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் 30லட்சருபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா . முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் கல்முனைத்தொகுதி மக்கள் எனக்கு 83மூ வாக்குகளை வழங்குனீர்கள். அதற்கு நான் இப்போது நன்றி கூறுகின்றேன்.நீங்கள் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக என்னைத்தெரிவு செய்தால் கல்முனைக்கு வந்து உங்களது தேவைளைப்பூர்த்தி செய்து தருவேன்.

சுமார் 213 வருடங்கள் மிகவும் பழமை வாந்த இவ்வைத்தியசாலை சுமார் 5 லட்சம் பொது மக்களுக்கான சேவையை மேற்கொண்டு வருகின்றது.எனவே இங்குள்ள தேவைகளை முடியுமான வரை பெற்றுத்தர முயற்சி எடுக்கப்படும்.

அரசாங்கத்திடம் முறையான முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமையாலேயே நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவைக்கண்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தினை நாம் நாடு பூராகவும் அமுல் படுத்தி வருகின்றோம்.சம்பிரதாய எதிர்க்கட்சிகள் போன்றல்லாது ஒரு திட்டமிட்ட அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் செயற்பட்டு மக்களின் சுகாதாரத்திற்கும் அவர்களின் உயிர்களைப்பாதுகாக்கவும் நாம் முன்னின்று உழைத்து வருகின்றோம்.இதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் வேறு மன நிலை கொண்டே பார்க்கின்றனர்.
உலகிலேயே ஒரு எதிர்க்கட்சி மக்களின் நலனுக்காக அரசு போன்று பெரும் தொகைப்பணத்தை செலவு செய்கிறோம் என்றால் அது நாம்தான் இத்திட்டத்தின் மூலம் இன்றுடன் சேர்த்து 45 ஆவது வைத்தியசாலையாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.மொத்தமாக கிட்டத்தட்ட 135 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள் இது வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இங்கு தேவைப்படும் மேலும் சில மருத்துவ உபகரணங்கள் பற்றி வைத்திய அத்தியட்சகர் வேண்டுகோள் ஒன்றை என்னிடம் முன் வைத்துள்ளார். நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் சகல முன்னேற்றங்களிலும் அவதானம் செலுத்திக்கொண்டே இருப்போம்.

அரசாங்கத்திடம் பொருளாதாரம் விவசாயம் சுகாதாரம் போன்ற துறைகளில் ஒழுங்கான திட்டமிடல் இல்லை .கொரோனா போன்ற அனர்த்த நிலைமைகளின் போதும் எவ்வாறு முன் ஆயத்தங்களுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரியாது.சகல விடயங்களிலும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.தேர்தல் ஒன்று வருகின்ற போது பொது மக்கள் இவர்களுக்கான ஒழுங்கான பதிலை வழங்கக்காத்திருக்கின்றார்கள்.தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவின் உரையை அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான அமைப்பாளர் வெ.வினோகாந்த் தமிழில் மொழிபெயர்த்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி சஜித் பிரேமதாசவின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களுக்கான அமைப்பாளர் வெ.வினோகாந்த் கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ. ரஸாக்இ கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள்இ வைத்தியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைத்தியசாலைக்கும் ஏனைய காரைதீவு நாவிதன்வெளி பனங்காடு திருக்கோவில் கோமாரி தமிழ்ப்பிரதேச வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது தொடர்பாக சஜித்பிரேமதாசவின் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களு;கான அமைப்பாளர் வி.வினோகாந்த மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கடந்த 3மாதங்களுக்குமுன் வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனைச்சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்படத்தக்கது.

இதன் போது வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரால் எதிர்க்கட்சித்தலைவர் பொன்னாடை போர்த்திக்கெளரவிக்கப்பட்டதுடன் இளைஞர் ஒருவரால் கைப்பட வடிக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவரின் உருவப்படமும் அவரிடம் வழங்கி வைக்கப்பட்டது.