தாயின் புத்திமதியை விரும்பாத மகன் தற்கொலை; பேசாலையில் சம்பவம்

( வாஸ் கூஞ்ஞ) 

தன்னை பெற்றெடுத்த தாய் நல்லொழுக்கத்துகான புத்திமதியை ஏற்றுக்கொள்ள விரும்பாத இளைஞன் ஒருவன் தனது வீட்டின் அறையினுள்ளே தூக்கிலிட்டு தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பேசாலை பகுதியிலேயே கடந்த செவ்வாய் கிழமை (15) இரவு இடட்பெற்றுள்ளது.

இவ் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ. குணகுமார் விசாரனையை முன்னெடுத்தபோது இறந்தவரின தாயாரும் மற்றும் சகோதரியும் சாட்சியமளிக்கையில்

தங்கள் குடும்பத்தில் தாய் தந்தையுடன் ஐந்து பேர் இவர் குடும்பத்தில் கடைசியானவர் வயது 22. ஏட்டாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொண்டார்.

பாடசாலையை விட்டு விலகியிருந்தபோதும் வீட்டில் பொறுப்பற்றவராக காணப்பட்டு வந்ததுடன் அதிகமான நேரங்களில் தனது நண்பர்களுடன் காலத்தை கழித்து வந்ததுடன் பெரும்பாலும் இரவிலேயே வீட்டுக்கு திரும்புவதும் உண்டு

இவர் பொறுப்பற்றவராக இருந்ததுடன் ஒழுக்கம் சீரழிந்து வருவதை விரும்பாததால் தான் சம்பவம் அன்று இரவு இவர் வீட்டுக்கு வந்ததும் புத்திமதிகளைச் சொன்னேன் என தாய் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது மகன் கேட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டார். சற்று நேரத்தில் யன்னல் வழியாக தாங்கள் எட்டிப்பார்த்தபோது அவர் கையடக்க தொலைபேசியை வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்.

பின் தந்தை தனது தொழில் முடிந்த பின் வீட்டுக்கு வந்தபோது உடுப்பு எடுக்கச் சென்றபோதே இவர் படுக்கும் தனது அறைக்குள் தூக்கில் இருந்ததைக் கண்டு காப்பாற்றும் நோக்குடன் பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் இருந்தும் அவர் இறந்தவராகவே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின் இவரின் சடலம் மன்னார் பொது வைத்திசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதுடன் மரண விசாரனையும் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு பின் சடலத்தை இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் மரண விசாரனை அதிகாரி பொலிசாருக்கு கட்டளையிட்டார்.