றாவூர்ப் பிரதேசத்தில் இதுவரை 60,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏறாவூரில் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஏறாவூர்ப் பிரதேசத்தில் இதுவரை சுமார் அறுபதாயிரம் பேர் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் தலைமையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின்போது இதுவரை சினோபாம் முதலாம் டோஸ் 23 ஆயிரம் பேருக்கும் இரண்டாம் டோஸ் 21 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில் 11 ஆயிரத்து ஐந்நூறுபேர் பூஸ்டர் தடுப்புசியைப்பெற்றுள்ளனர்.

இதேவேளை இங்கு சுமார் ஐயாயிரம் பேர் பைஸர் தடுப்பூசி பெற்றுள்ளதாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் குறிப்பிட்டார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் கட்டாயத்தை வலிறுத்தி ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொது இடங்களில் அடிக்கடி ஒலிபெருக்கிகள்மூலமாக அறிவிப்புச்செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.