தமிழ் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம் ஜனன தின நூற்றாண்டு விழாவும், ஞாபகார்த்த முத்திரை வெளியீடும்

(எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்)

தமிழ் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ். டி. சிவநாயகம் ஜனன தின நூற்றாண்டு (1921-2021) விழாவும், ஞாபகார்த்த முத்திரை வெளியீடும் கடந்த புதன்கிழமை ஸ்ரீ சத்ய சாயி, சீரடி பாபா (கொழும்பு) மத்திய நிலையத்தின் அறங்காவலரும், தலைவருமான எஸ். என். உதயநாயகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பி. இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட பல பிரமுகர்கள் முதல் நாள் ஞாபகார்த்த முத்திரை உறை வழங்கப்படும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.ண்