மீண்டும் காரைதீவில் பைசர் வக்சீன் தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்!

(காரைதீவு சகா )

சுகாதார தொழிலாளர்களின் தொழிற்சங்க போராட்டத்தின் பின்னர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று(16) முதல் மீண்டும் மூன்றாவது டோஸ் பைசர் தடுப்பூசி ஏற்றுகின்ற நிகழ்வு ஆரம்பமானது.

நேற்றைய தினம் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கூடுதலானோரா இந்த வக்சீன் ஏற்ற வருகை தந்திருந்தனர் .

காலை முதல் மாலை வரை 200க்கு மேற்பட்டவர்களுக்கு வக்சீன் ஏற்றப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார் .
மேலும் இந்த மூன்றாவது வக்சீன் தொடர்ச்சியாக தினமும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்றப்படும் பொதுமக்கள் தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார வைத்தியதிகாரி கேட்டுக் கொள்கிறார்.