பொத்துவில் சைக்கிளோட்ட வீரருக்கு மருதமுனையில் மகத்தான வரவேற்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ 42 வயதுடைய கலந்தார் சுல்பிகார் (16) மாலை மருதமுனையை வந்தடைந்தார். சைக்கிளோட்ட வீரருக்கு
மருதமுனை மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.

இலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை இவர் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆர‌ம்பித்திருந்தார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளது.

நான்காவது நாளான இன்று குறித்த சைக்கிளோட்ட வீரர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக சென்றபோது மருதமுனை பிரதேசத்தில் வைத்து இந்த மகத்தான பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், பிரதேசத்தின் தனவந்தர்கள், வர்த்தகர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் சைக்கிள் ஓட்ட வீரரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.