ஓட்டமாவடி செயலகத்தால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

(குகதர்சன்)

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பி.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.தவராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பதினைந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.