சமுர்த்தி செளபாக்கியா வீட்டுத் திட்டத்தின் வெற்றியாளர் களிடம் வீடுகளை கையளித்தல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் வெற்றி பெற்று வீட்டு வேலைகளை பூரணப்படுத்திய மீராவோடைமேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஹ.லெ.முகைதீன்பாவா, அ.மரியம்வீவி மற்றும் மீராவோடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த அ.யூசுப்லெப்பை, ஓடடமாவடி 208 கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சீ.மு.றாசிக் ஆகியோர்களுக்கான வீட்டினை சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களினால் கையளிக்கப்பட்டது.