கல்முனை பிரதேச கடலில் மீன்பிடி படகு ஒன்று முழுவதுமாக மூழ்கும் நிலையில் – மீட்புப் பணியில் உரிமையாளர்

(எஸ்.அஷ்ரப்கான் )

கல்முனை பிரதேச கடலில் மீன்பிடி படகு ஒன்று இன்று (14) மூழ்கும் நிலையில் காணப்படுகிறது. நேற்று (13) மாலை முதல் இந்த படகு கல்முனை கடல் பிரதேத்திலிருந்து சாய்ந்தமருது பிரதேசம் வரை நீரோட்டம் காரணமாக மூழ்கிய நிலையில் அடித்து வரப் ட்டுள்ளது.

இதேவேளை சாய்ந்தமருது கடற்கரையிலிருந்து சுமார் 400 மீற்றல் தொலைவில் இப்படகு மூழ்கி காணப்படுகின்றது.

கல்முனையை சேர்ந்த படகு உரிமையாளர் உள்ளிட்ட குழுவினர் மூழ்கும் குறித்த படகினை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளை இப் படகு மூழ்குவதற்கான காரணம் இயந்திர கோளாறா அல்லது வேறு ஏதாவது நாசகார செயலா என்பது தொடர்பில் தகவல் வெளியாகாத போதும், கடல் கொந்தளிப்பே காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.