கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடுகள் சேதம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் உள்ள காளிகாபுரம் வீட்டுத்திட்ட பகுதிக்குள் காட்டு யானை புகுந்து வீடுகள், பயிர்களை சேதமாக்கிய சம்பவம் நேற்று(08) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதிக்குள் நேற்று இரவு உள்நுழைந்த காட்டு யானை வீட்டின் மதிலை  உடைத்துள்ளதுடன், பயிர்களை சேதப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.