கொக்கட்டிச்சோலை படுகொலை 33,ம் ஆண்டு நினைவை தடைசெய்து அரியநேத்திரனுக்கு நீதிமன்ற தடை உத்தரவு!

கடந்த 1987, ஜனவரி,28,ம் திகதி இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை இரால் பண்ணை மற்றும் சூழவுள்ள கிராமங்களை்சேர்ந்த 197, அப்பாவி மக்களின் 33,ம் ஆண்டு படுகொலை நினைவு 2022,ஜனவரி,28,ம் திகதி இன்று இடம்பெற இருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிசாரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு அவரின் இல்லத்திற்கு சென்ற பொலிசார் இன்று(26/01/2022) வழங்கியுள்ளனர்.

தடை உத்தரவில் அரசாங்கத்திற்கு எதிரான தூண்டுதல் செயல் எனவும்,தற்போது கொரோணா வைரஷ் தொற்று பரவும் சூழல் உள்ளதாகவும்,தடை்செய்யப்பட்ட இயக்கங்களை மீள்உருவாக்கும் செயலாக காணப்படுவதால் 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 106(1)கீழ் தடை உத்தரு வழங்க கொக்கட்டிச்சோலை பொலிஷநிலைய பொறுப்பதிகாரி நளீன் அசோக குணவர்தன மன்றுக்கு அறிக்கை செய்தமையால் இந்த கட்டளை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சாணாக்கியன், கோ.கருணாகரம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.புஷ்பலிங்கம்,தமிழ்தேசிய மக்கள் முன்னணி பொறுப்பாளர் த.சுரேஷ் ஆகிய ஐந்து பேர்கள் அந்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.