பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் (அம்பியூலன்ஸ் வண்டி) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் நோயாளர் காவு வண்டி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.