மட்டக்களப்பு  ஏறாவூரில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் 05ஆம் குறிச்சி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பட்டப்பகலில் வீட்டினுள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண் குடும்பஸ்த்தர்களை அச்சுறுத்தி நகைகயை கோரியுள்ளனர்.

மோட்டார் வண்டியின் இலக்கங்களை மறைத்து வந்து வீட்டினுள் நுளைந் கும்பல் வாள், கத்தி, தடியுடன் நுளைந்து குடும்பஸ்தினரை அச்சுறுத்தி நகைகளைக்கோரியுள்ளனர்.

குறித்த வீட்டிற்கு அயலவர்கள் வந்தவேளை குறித்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இச் சம்பவற்கள் அங்கிருக்கும் சிசிரீவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.