மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்திற்கு எதிராகவே மூதூர் பொலிஸில் கிராமசேவகரால்முறைப்பாடு

(பொன்ஆனந்தம்)

மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள 64 ம் கட்டை மலையடிபிள்ளையார் ஆலயம் புனர்தான விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம சேவகர் மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்திற்கு எதிராகவே மூதூர் பொலிசில் கிராமசேவகரால் இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19.0102022அன்று குறித்த ஆலய கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரிய போதும் நிறுத்தாமல் இந்து குருமார் சங்கம் புனர்த்தாரன பணிகளை மேற்கொண்ட தாக
தெரிவித்தே கிராமசேவகர் மூதூர் பொலிஸ் நிலயத்தில் முறையிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இன்றையதினம் குருமார் சங்க நிருவாகிகள் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.

இங்கு கலந்து கொண்ட குருமார் சங்கத்தலைவர் பாஸ் கரன் குருக்கள் தெரிவிக்கையில்,

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கிராமசேவகரால் முறைபாடு செய்யபட்டிருக்கிறது. அதுவிடயமாக இன்று மூதூர் நிலையத்திற்கு சென்றோம்.

முதலில் எமக்கு மூதூர் பொலிசாரால் கொடுக்கபட்ட அழைப்பில் சிங்கள மொழியில் எழுதபட்டுள்ளதால் எமக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. என எமது ஆட்சேபனையை யம் பொலிசாரிடம் தெரிவித்தோம்.

பிற்பாடு மொழி ரீதியாக ஏற்பட்ட தவறு இனிமேல் நடக்காது என்று பொலிசார் குறிப்பிட்டதாக தலைமை குரு பாஸ்கரன் தெரிவித்தார்.

இதனையடுத்து எமது இந்து குருமார் சங்கத்திற்கு எதிராக செய்யபட்ட முறைப்பாடு பற்றி பொலிசார் விளக்கி குறிப்பிட்டனர்.

அணுமதியை பெறாமல் நீங்கள் 19-01-2022 தடுத்த போதும் மீறி ஆலயப்பணியை செய்ததாககிராமசேவகரால் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

நாம் அதற்கு விளக்கம் கோரிநோம். எமக்கு சட்டரீதியாக எழுத்து மூலம் அறிவிக்காது எமது மதகுருமாரையும் எமது இந்து மதத்தையும் அவமதிக்கும் வகையில் மூதூர் பிரதேச செயளாலரின் ஆலோசனைக்கு அமைவாக கிராமசேவையாளரும் கடந்த 19 எமது பூஜையை தடுத்துள்ளனர்.

எமக்கு எதிராக பொலிஸ்சில் முறைபாடு செய்ததும் எம்மை எல்லோரையும் அவமதிக்கும் செயலும் நாகரிகம் இல்லாத செயல் எனவும் விசாரணை யின்போது நாம் குருமார் சார்பாக சுட்டிகாட்டினோம்.

இந்த விடயத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவினர் எமக்கு தகுந்த விளக்கம் தரவேண்டும்.
என எமது நிலைபாட்டை விசாரணை யின்போது கூறினோம்.
எமக்கு கடந்த 22 திகதி ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தான் கோயில் கட்டுமான பணிநிறுத்துமாறும் இந்த பூமியை பூஜா பூமிக்கு கேட்டுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் நாங்கள் ஏற்கமுடியாது என்பதையும் அப்படியாயின் மற்றவர்களுக்கு எப்படி அவ்விடத்தில் வேறு வணக்க சிலைகள் வைக்கவோ ஏனையவேலைகள் செய்யவோ எந்த வகையில் அனுமதிக்கப்பட்டது.

எனவே அதுபோல் எமக்கு இந்த பாரம்பரி பழமை வாய்ந்த கோயிலை கட்டுவதற்கு ஏன் தடைவிதிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினோம்?
தடை உத்தரவு எங்களுக்கு முன் கூட்டியே கொடுக்கமால் முறைபாடு செய்தது தவறு என்றும் பொலிசாரிடம் சுட்டிக்காட்டிய போது அதனை கிராமசேவையாளரும் ஏற்றுக்கொண்டார்

எனவே விரைவில் ஆலயம் கட்டுவதற்கான அணுமதியை பிரதேச செயலாளர்
வழங்கவேண்டும் எனவும் இன்றய விசாரணை யில் வலியுறுத்தி னோம். எனவும் தெரிவித்தார்.