கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பாரம்பரிய தைப் பொங்கல் விழா கலாச்சார

(க.ருத்திரன்)

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற தொணிப் பொருளில்  புதன்கிழமை(19) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா இன்று கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் இவ் பொங்கல் விழா பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.இதன்போது நந்திக் கொடியேற்றல்;,கொடிக்கவி இசைத்தல்,தமிழ்மொழி வாழ்த்து,மங்களவிளக்கேற்றல் நிகழ்வுகளுடன் பொங்கல் விழா அரம்பிக்கப்பட்டது.

பிரதேசத்தின் சமூக மட்ட அமைப்புக்கள்,பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் நிகழ்வினை சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச அறநெறி பாடசாலை மாணவர்களினால் வில்லுப்hட்டு,நாட்டார் பாடல்,கிராமிய நடனம்,புஸ்பாஸ்சலி,பேச்சு,கூத்து,தாண்டவம்,உடு இசைத்தல்,மற்றும் தனி நடனம் போன்ற கலை நிகழ்சிகள் நடைபெற்றது.மேற்படி பொங்கல் விழாவினை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்த்தர்.கே.எஸ்.ஆர்.சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.