அம்பாரைமாவட்டத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாரை மாவட்டத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19.01.2022) பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச் செயலாளர் ஏ.நிதான்சன் தலைமையில் நடைபெற்றது.

பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் நோக்கோடு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், அக்கரைப்பற்று, நாவிதன்வெளி, கல்முனை, பாண்டிருப்பு, போன்ற பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்து துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு கனடா நாட்டில் வாழும் தமிழ் உறவுகள் அனுசரணையை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கே.சேயோன், சமூக ஆர்வலர் வை.கே.நாதன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.