மட்டக்களப்பு தேத்தாதீவு புனித யூதாதையு திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் திருப்பலி பூசை

(ரக்ஸனா)

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழ் மக்கள் அனைவரும் இன்றயத்தினம் அவரவர் வழிபட்டுவரும் வழிபாட்டுத் தலங்களுக்கு அதிகாலை வேளையிலேயே சென்று இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் தேத்தாத்தீவு புனித யூதாதையு திருத்தலத்தில் தைப்பாங்கலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(14) காலை 6.30 மணியளவில் திருப்பலி பூசை இடம்பெற்றது.

திருத்தலத்தின் குரு நிர்மல் சூசைராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலி பூசையில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.