சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதி

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அண்மையில்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்ததினால் கடுமையாகபாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டஆலங்குடா பிரதேச மக்களுக்கு தலா 11000/= ரூபாய் பெறுமதியான 300 அத்தியவசியபொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின்பேரில் தனியார் தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையில்  (11) வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மட் ரியாஸ், தனியார் தொண்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம். மிஹ்லார் உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.