கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்;  மகாமார் ஊடாக கல்லடி வெட்டுவானுக்குச் செல்லும் வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாள் பிரிவுக்குட்பட்ட மகாமார் ஊடாக கல்லடி வெட்டுவானுக்குச் செல்லும் வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி (10) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு,மகாமார் குளத்துக்குச் செல்லும் வீதியில் இடம் பெற்றது. இவ் ஆர்ப்பார்ட்டத்தை மகாமார், சின்ன மகாமார் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 85க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 400 மீட்டர் தூரமான வீதியே இவ்வாறு புனரமைக்கப்படாமல் நிர்க்கதியான நிலையில் உள்ளது.

” தா தா வீதியைப் புனரமைத்துத்தா “, பொய் வாக்குறுதிகளை வழங்காதே”நீங்கள் சொகுசில் வாழ நாங்கள் சேற்றில் சாகவா “முதலான வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

கல்லடி வெட்டுவான், கங்கை,சின்ன மகா மார், சுங்கான் குழி, பட்டியனூர், கல்லறப்பு முதலான கிராமங்களுக்கச் செல்லுவீதியைப் புனரமைச் செய்து தருமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் வலுப்பெற்றது.

இவ்வீதியூடாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், மீனவர்கள், விவசாயிகள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ்வீதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வீதி சுமார் 50 வருடங்களாகப் புரரை மைக்கப்படவில்லை என்றும் பல அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் எவ்விதப் பயனும் இல்லை கூறப்படுகிறது.