நாட்டின் நலனோங்க அம்பாறை பள்ளிவாசலில் பிராத்தனை; ஹரீஸ் எம்.பி, அரசாங்க அதிபர் பங்கேற்பு

(நூருல் ஹுதா உமர்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு அம்பாரை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அண்மையில் கடமையேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி ஜே. எம்.ஏ. டக்ளஸ் ஆகியோர் அம்பாறை ஜும்மாப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பள்ளிவாசலின் தற்போதைய நிலைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் நாட்டின் நலம் வேண்டி துஆ பிரார்த்தனை நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் எம். றபீக், அம்பாறை மாவட்ட விவசாயப்பணிப்பளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், அம்பாறை ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் உட்பட நிர்வாகிகள், அம்பாறை மாவட்ட செயலக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாட்டில் சுபீட்சம் ஓங்கவும், மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை முறை கிட்டவும் அம்பாறை ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.