திருமலை மாவட்டத்தில் பின்தங்கிய ஐந்து கிராமிய வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ சேவை ஊழியர்களினால் திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய ஐந்து கிராமிய வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று சேருவில கிராமிய வைத்தியசாலையில் சாஸ்த்திரபதி ராஜகீய பண்டித ரஜவெல்ல சுகுதி தேரர் நடைபெற்றது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச்சேர்ந்த தனவந்தர்கள் இவ்வுபகரணங்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் ஊழியர் சபைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

அதன் ஒருபகுதியே இன்று திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல, மொரவெவெ, மகதிவுல்வெவ, பதவிசிறீபுர மற்றும் சேருவல ஆகிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.இதன் பெறுமதி 5 மில்லியன்களாகும்.

ரஜவெல்லே சுகித தேர ரால் குறித்த வைத்திய உபகரணங்கள் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.கே.கொஸ்தாவிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சேருவல மங்கல ரஜமகா விகாரையின் விகாராதிபதி அழுதினே சுபோதி தேரர் ,பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம்(வைத்திய வழங்கல்) விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய ,வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டனர்.