மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு

(வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (06.01.2022) கொண்டாடப்பட்டது.

இவ் தினத்தை முன்னிட்டு வங்காலை புனித ஆளாள் ஆலயத்தில் ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் ஆலய பணிமணையில் பங்கு தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன் தலைமையில் ஆயர் கேக் வெட்டி இவ் தினம் கொண்டாடப்பட்டது.