மன்னார் மாவட்ட செயலகத்தில் நவீன முறையிலான இலங்கை வங்கி கிளை திறந்து வைப்பு

( வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இலங்கை வங்கி கிளையானது தற்பொழுது புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் விரைவான சகல வங்கி சேவைகளையும் வழங்கும் தன்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06.01.2022) காலை வட மாகாண உதவி பொது முகாமையாளர் வீ.சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ் வங்கி கிளையை திறந்து வைத்தார்.

இவ் நிகழ்வில் இலங்கை வங்கியின் மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.ஆனந்தராஐட. மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர்கள் எஸ்.குணபாலன், வசந்த குமார், மாவட்ட செயலக பிரதான உள்ளாய்வு கணக்காளர் கே.சுரேஸ் குமார் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.