திருமலையில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு; சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்)

திருகோணமலை பகுதியில் ஒரே குடும்பத்தில் கைகலப்பு சந்தேகத்தின் பேரின் எட்டுப்பேரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் புதன்கிழமை (5)உத்தரவிட்டார்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,43,17,20,27,24,16,மற்றும் 57வயதுடைய என்மரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் மருமகன் ஒருவரை குடும்ப பிரச்சினைகள் காரணமாக தாக்கியுள்ளதாகவும் அதை அறிந்த அயல் வீட்டு உறவுக்காரர்கள் அனைவரும் ஒன்றினைந்து தந்தையையும்,மகனையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

இதில் காயங்களுக்குள்ளான தந்தையும் ,மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
தந்தை மற்றும் மகனை தாக்கிய எட்டுப் பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.