இனவாதம் பேசி குரோதங்களை வளர்த்து ஆட்சி பீடத்தை கைப்பற்றிய அரசாங்கம் :

ஆட்சி பீடத்தை இழக்கும் நிலை திருமலையின் அபிவிருத்திக்கு ஐக்கிய மக்கள் சக்தி உத்தரவாதம் – திருமலையில் சஜித் பிரேமதாச

(ரவ்பீக் பாயிஸ்)
இனவாதம் மதவாதம் குரோதங்கள் என்பன நாட்டில் தலைதூக்கி உள்ளதாக குற்றம் சுமத்தி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கம் தற்போது அவர்களுக்குள்ளே பல கூட்டங்களாக பிரிந்து ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்

இன்று (05) இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு விஜயம் செய்து திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் ஆதரவாளர்களுடன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் …

இனவாதம் மதவாதம் இனங்களுக்கிடையே குரோதம் பழிக்குப் பழி என்பவற்றினை பிரச்சாரம் செய்து ஆட்சிபீடத்தில் அமர்ந்து அதன் பின்னர் முழு நாட்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி  முழு நாட்டு மக்களிடையே வைராக்கியங்களை விதைத்து எதிரிகளை உருவாக்கி ஒருவருக்குள் ஒருவர் முட்டி மோதிக்கொண்டு நாட்டுக்குள் பெரும் தீயை மூட்டி வைத்து இனவாதம் மதவாதம் தலைதூக்கி அரசாங்கத்திற்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள்ளேயே பல பிளவுகள் ஏற்பட்டு பல கூட்டங்களாக பிளவுபட்டு உள்ளார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் .

மேலும் அரசாங்கத்திற்குள் பல குழுக்கள் உருவாகி உள்ளது நாட்டு மக்களை கூட்டம் கூட்டமாக பிரித்த அரசாங்கம் வைராக்கியம் பிளவுகள் பழிக்குப் பழி என்பன அவர்களுக்கே வினையாக மாறியுள்ளது

இவ்வாறு ஆட்சிபீடத்தை கைப்பற்றுவதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்ட அதி புத்திசாலிகள் இன்றைய தினம் வெளிப்படையாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டை பிளவு படுத்தியவர்கள் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் முளைவிட்ட இந்த அரசாங்கம் பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது

இவ்வாறன தலைவர்களை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக தூரத்தில் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

திருகோணமலை மாவட்டத்தின் கடந்தகால அபிவிருத்தி திட்டங்களை எடுத்துக்கொண்டால் திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தபட வில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்

எனவே ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆட்சி ஒன்று அமையுமாக இருந்தால் அதன் தலைவர் என்ற வகையில் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பிரதான நகரங்கள் மற்றும் உப நகரங்களில் உரிய அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப் படுத்துவோம் என இவ்விடத்தில் உங்களிடம் உறுதி அளிப்பத்க்கவும் பொறுப்பு நிட்பதாகவும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்

இன்றைய மக்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.