மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில்

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் நேற்று(4) உத்தரவிட்டார்.

மூதூர்,தோப்பூர்,பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும்  ,தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்  அயல் வீட்டில் வசித்து வந்த பதின்மூன்று வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.