(ஏ.எல்.றியாஸ்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கினங்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட குழந்தைகளுக்கான உடல் வெப்பநிலை பேணும் வோமர் உபகரணம் நேற்று (4) வைத்தியசாலை பிரசவ விடுதிக்கு கையளிக்கப்பட்டது. வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் மகப்பேற்று வைத்திய நிபுணர் மகேஷன் ஹேரத்திடம் உபகரணத்தினை கையளிப்பதனையும், விடுதி முகாமையாளர் எம்.எம்.அமானுல்லா மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.