திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமானம்.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் அலுவலக புதிய ஆண்டின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமான உறுதி உரை நிகழ்வும் கொவிட் பாதுகாப்பு சுகாதார விதிமறைகளுக்கு அமைவாக இன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இவ் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.
அந்தவகையில் அரசின் சுற்று நிருபத்திற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்ததுடன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இருந்ததுடன் தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமான உரை இடம்பெற்று நாட்டிற்காக உயிர் நீத்த முப்படையினருக்கும் மௌன ஆஞ்சலிகள் செலுத்தப்பட்டதுடன் ஜனாதிபதி பிரதமர் மற்றும்  நாட்டு மக்களுக்கு நல்லாசி வேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெற்று இருந்தன.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகரின் கொவிட் பாதுகாப்பு உரை இடம்பெற்று இருந்ததுடன் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனால் 2022ஆம் ஆண்டிற்கான அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் விசேட உரையும் இடம்பெற்று இருந்தன.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா கணக்காளர் எம்.அரசரெத்தினம் மற்றும் கிளைத் தலைவர்கள் உத்தியோகதத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர்.