இளைஞர்கள் அனைவரும் எதிர்காலத்தில் எமது இனத்தின் விடியலுக்காக  ஒன்றிணைய வேண்டும்.பூ.பிரசாந்தன்

(கமல்)

எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இரண்டு சிந்தனைகளின் அடிப்படையில்  மட்டக்களப்பு  மாவட்டத்தில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார். அப்பணிகளில் அவர் உறுதியாக இருக்கின்றார் என முனனாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அவர்கள் தெரிவித்தார்.

குறுமண்வெளி சிக்கன கடனூதவு கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட முப்பத்தி நான்காவது பரிசளிப்பு விழா அதன் தலைவர் நாகேந்திரன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நாட்டின் வரவு செலவு திட்டம் கூட இம்முறை நாட்டின் கிராமிய பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டுதான் முன்வைக்கப்பட்டள்ளது. காரணம் நாட்டின் ஒட்டுமொந்த பொருளாதாரம் உயர வேண்டுமாக இருந்தால் கிராமிய பொருளாதாரத்தினை உயர்ந்த வேண்டும்  என்பதேயாகும். எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இரண்டு சிந்தனையுடன் இந்த மாவட்டத்தில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார் ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் தன்னிறைவுள்ள பொருளதாரம் மலரவேண்டும்;. மற்றயது நாங்கள் கல்வி ரீதியாக முன்னேற வேண்டும் இந்த இரண்டையும் முதன்மையாகக் கொண்டே எமது தலைவர் அவரது பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இதுவே மக்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்கும். என்பதே அவரின் சிந்தனையாகும்.
இந்த இரண்டு விடயங்களில்  நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் தொடரந்தும் எமது இனம் அடிமைப்படுகின்ற யாரிடமும் கையேந்தி நிற்கின்ற நிலையை நாங்கள் உருவாக்கிவிடக் கூடாது எமது கிழக்கு மாகாணத்தின் இருப்பினை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமாக இருந்தால்  கல்வி மற்றம் குடும்பரீதியான  பொருளாதாரத்தினை உயர்துவதன் ஊடாகவே  இதiனை மேற் கொள்ள முடியம்  இதற்காக  இளைஞர்கள் அனைவரும் எதிர்காலத்தில் எமது இனத்தின் விடியலுக்காக  ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் இம்முறை வெறும் அறுபத்தேழு வாக்கினால்தான் ஒரு பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்துள்ளோம் ஆனால் நீங்கள் அறுபத்தேழு வருடங்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றீர்கள் இதனூடாக நீங்கள் அடைந்த பயன் என்னவென்பதை சிந்திக்கவேண்டும். எனவே எதற்காக நாங்கள் வாக்களிக்கின்றோம் எங்களுக்கு என்ன தேவை இருக்கின்றது என்று சிந்தித்து  வேண்டும். அழுதபிள்ளையே பால் குடிக்கும் தேவை என்னவோ அதனை மையமாக வைத்தே வாக்களிக்க வேண்டும் எதிர்காலத்தில்  எஞ்சியிருக்கின்ற  சந்ததியையாவது நாங்கள்  காப்பாற்ற வேண்டும் அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் சொல்லவில்லை உதாரணமாக இச்சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கமானது பல  கோரிக்கைகளை  முன்வைத்துள்ளது அதில் ஒன்று மண்டூர் பாலத்தினை அமைத்து தரவேண்டும் என்பதாகும் உண்மையில் இதுவொரு அபிவிருத்தி சார்ந்த வேலையாகும் இது நடைபெறாமல் போனால் எதிர் காலத்தில் கிண்ணியா சம்பவம் போன்று இறக்கப்போவது எமது சமூகந்தான் எனவே இதனை மேற் கொள்வதற்கு அரசியல் முக்கியமானதாக இருக்கின்றது எனவே எமது சமூகத்தை காப்பாற்ற யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை சிந்தியுங்கள்.

எனவே இன்று எமது இனத்தினை எடுத்துக் கொண்டால் அரசியல் இன்றியமையாததான்றாக அமைந்துள்ளது. ஆனால் இன்று  கூறுவர்கள் எல்லா  இடங்களிலும் அரசியல் பேசமுடியாதென்று நாங்கள் இதனால்தான்  பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். சமூகம்சார்ந்த எந்த விடயததை எடுத்துக் கொண்டாலும்  அரசியல் தேவையாக இருக்கின்றது சுருக்கமாக கூறப்போனால் பிறப்பில் இருந்து இறக்கும் வரை அரசியல் தேவை எனவே அரசியல் இன்றி எதனையும் எமது சமூகத்திற்கு செய்துவிட முடியாது சமூகம் அதனை பெற்றவிடவும் முடியாது. எனவேதான் அரசியில் எம்முடன் பின்னிப்பிணைந்தள்ளது எனவே  எமது இளந்தலைமுறையினராகிய நீங்கள் இந்த சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சேவையாற்ற வேண்டும் என்று  நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சிறந்த அரசியல் தலைவர்கள் உருவாகுவதன் ஊடாவே எமது சமூகமும் நிறந்து விளங்கும் என்பதனை நிங்கள் மறந்துவிடக் கூடாது எனவே    எதிர் காலத்தில்  இளந் தலைமுறையினர் அரசியலில் முன்வரவேண்டும்  நீங்கள் அரசியலில் இருந்து பின்செல்ல செல்ல எமது சமூகமும் பின்னோக்கி செல்லும் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எமது சமூகமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதனை நீங்கள் மறந்துவிடக் கூடாது என அவர் இதன் போது தெரிவித்தார்