நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் உதவித்தொகை வழங்கிவைப்பு.

(நூருல் ஹுதா உமர்) நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சிறுவர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் இரட்டைக் குழந்தைகள் உதவித் தொகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சபறுல் ஹஸீனாவின் ஏற்பாட்டில் சேவை நாடிகளுக்கான மருத்துவ உதவி மற்றும் இரட்டைக் குழந்தைகள் உதவித் தொகை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டது.இந்த உதவித் தொகைகள் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் மற்றும் கணக்காளர் றிம்ஷியா அர்சாட் ஆகியோரினால் புதன் கிழமை பிரதேச செயகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.