(ஏறாவூர் நிருபர் நாஸர்)
மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத விபத்தில்மதுபோதையுடன் சென்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (28.12.2021) 8.30 மணியளவில் ஏறாவூர் – ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் என்பவரே உயிரிழந்ததாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் என்பவரே உயிரிழந்ததாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
மேசன் தொழிலாளியான இவர் மிகுந்த மதுபோதையுடன் தனது தொழில் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக ரெயில் பாதையைக்கடக்கும்போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.