சமூக முன்னோடிகள் பத்துப்பேர் மட்டக்களப்பு- ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் கௌரவிக்கப்பட்டனர்.

(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
மீராகேணி ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில்           அப்பள்ளிவாயல் மண்டபத்தில் இந்த  நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவர் எம்.பி. ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது                     கல்வி , நிருவாகம், வைத்தியம், மார்க்கம் உள்ளிட்ட           பல்வேறு துறைகளில் கடந்தகாலங்களில்                   பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பான பணியாற்றிமைக்காக              இந்த கௌரவிப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக                      செயலாளர் எம்எச். அஸ்மிர் தெரிவித்தார்.

சமூக முன்னோடிகள் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இளந்தலைமுறையினரை சமூகப்பணிகளில்            ஊக்கப்படுத்தம் நோக்கதத்துடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக முன்னோடிகளுக்கான பாராட்டு நிகழ்வு                 இப்பிரதேசத்தில் வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.