படைப்பாளிகள் சங்கமம் ஒன்றுகூடல்.

 

(பைஷல் இஸ்மாயில்) எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்திய படைப்பாளிகள் சங்கமம் ஒன்றுகூடல் நேற்று (26) திருகோணமலை அலஸ் தேட்ட யோசா விருந்தினர் ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த கலை இலக்கிய மன்றத்தின் அமைப்பாளர் கனக தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு காலைக்கதிர் பத்திரிகையின் பொது முகாமையாளர் சிவராஜா யதுராஜ் பிரதம அதிதியாகவும், காலைக்கதிர் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பிரியமதா பயஸ், கவிஞர்களான க.கோணேஸ்வரன், ஷெல்லிதாசன், ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

இந்த ஒன்றுகூடல் நிகழ்வின்போது எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தில் அங்கம் வகிக்கின்ற படைப்பாளிகளின் படைப்புக்கள் மற்றும் அவர்களின் விஷேட திறமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களின் திறமைகளை மேன்மேலும் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது பற்றியும் மிக விரிவாக ஆராயப்பட்டது.