கல்முனை ஸாஹிரா ஆங்கில ஆசிரியர் ஷஃபி எச். இஸ்மாயிலுக்கு பாராட்டு

நூருள் ஹுதா உமர். 
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியரும், நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டமானி ஷஃபி எச். இஸ்மாயில் இலங்கை சட்டக்கல்லூரி அட்டோனி இறுதிப் பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றி சித்தி அடைந்ததற்கான பாராட்டு விழாவொன்று இன்றிரவு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாடசாலை வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  ஆசிரியராக கடமையாற்றும் போதே சட்டத்தரணியாக தகுதி பெற்ற ஆசிரியர் ஷஃபி எச்.இஸ்மாயிலை பாராட்டும் முகமாக  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாராட்டு விழாவானது கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது சட்டமானி ஷஃபி எச்.இஸ்மாயிலுக்கு ஆசிரிய சமூகத்தினரால் பொன்னாடை, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வில் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்