குடும்ப வன்முறை தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)பாலியல் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறை குறித்த சமூக விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகம் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவு,பெரண்டினா நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த நாடக விழிப்புணர்வானது இன்று (24) சிராஜ் நகர் பகுதியில் இடம் பெற்றது. கிழக்கு பல்கழைக்கழக மாணவர் குழு இவ் வீதி நாடகத்தை அரங்கேற்றினர்.

குடும்ப வன்முறை,சிறுவர் துஷ்பிரயோகம்,ஆண் பெண் சமத்துவ நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரதிபலிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டது. சமூகத்தில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்களை வைத்து மக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் குறித்த வீதி நாடகம் நடை பெற்றது.   சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் இருந்து அது தொடர்பான விழிப்புணவுக்காக மக்கள் மத்தியில் இது சிறப்பான வரவேற்பை பெற்றதுடன் நாடகக் குழுவினரை அப் பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

குறித்த இவ் வீதி நாடகத்தில்  மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எஸ்.டீபானி அபேசேகர,   தம்பலகாமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி, நாடகக் குழுவினர், அரச உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.