சின்னத்தளவாய் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பங்கேற்பு!!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம்  (22) ஏறாவூர்ப்பற்று சின்னத்தளவாய் கிராமத்தில் கலைமகள் பாலர் பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்மூலங்களை பாதுகாத்தல் மற்றும் கிராமங்களை அழுகுபடுத்தி பசுமையான இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் ஊடாக இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வுகள் மாவட்ட தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்றுவரும்  நிலையில் அதன் ஒரு அங்கமாக இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய பிரதேச கிராம அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.
இதன்போது பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், தேசிய சமூக நீர்வளங்கள் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகத்தர் திருமதி.சுலட்சனா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் செயற்திட்டத்தில் பங்காளர்களாக இணைந்திருந்தனர்.
அதேவேளை இன்றைய தினம் இலுப்பட்டிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திலும் மரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டு பயன்தரும் மரக்கன்றுகளை நாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.