அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி.

(றாசிக் நபாயிஸ்)அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின்  கீழ் காணப்படும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக அம்பாறை மாவட்டச் செயலக மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான 03 நாள் கணனிப் பயிற்சி நெறி 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் அம்பாறை இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளராக செயற்படுகின்ற
ஏ.முஹம்மட் பிறோஸின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக பதில் மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீஸன்
தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் கணனிப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி உத்தியோகத்தர்களுக்கு  கருத்துக்கள் வழங்கினார்.
அபிவிருத்தி உத்தியோகத்தகளின் கணனியறிவை மேம்படுத்தும் நோக்கில் நடார்த்தப்படும் இப்பயிற்சி நெறியில் அம்பாறை இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி ஏ.பி.செனவிரத்ன கலந்து கொண்டார். இவ்மூன்று நாள் கணனி பயிற்சியை  அம்பாறை இளைஞர் சேவைகள் மன்றத்தின்  கணனி போதனாசிரியர்
என்.டபிலியூ.பி.லலின்ட் நடார்த்தினார்.
mde

dav