(எச்.எம்.எம்.பர்ஸான்)கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியிலே இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சினை காரணமாக மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய தாயின் சகோதரனை (மாமாவை) மருமகன் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இக் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.