வைத்தியதிகாரிகளின் வேலை நிறுத்தத்தால் மட்டு.மாவட்ட வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம்

(ரீ.எல்.ஜவ்பர்கான்) அரச வைத்தியதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட  வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனைத்து வைத்திய சேவைளும் பாதிக்கப்பட்டிருந்தன.
வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பை அறியாமல் தூர இடங்களிலிருந்து கிளினிக் மற்றும் வைத்திய சேவைகளைப் பெற வருகை தந்த நோளாளர்கள் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
வெளிநோயாளர் பிரிவிலும் நோயாளர்கள் காத்துக்கிடந்ததையும் அவதானிக்க முடிந்தது.