மட்டு ,அம்பாரை விஞ்ஞான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு நிகழ்வு.

(எஸ்.சபேசன்)மட்டு அம்பாரை விஞ்ஞான ஒன்றியம் மற்றும் நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் பொது நூலகமும் இணைந்து பாடசாலை மாணவர்களிடையே நடாத்திய வாசிப்பு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி  நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில்  15 ஆம் கிராம பொது நூலகத்தின் தலைவர் க.துஷ்ஷந்தன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டு அம்பாரை விஞ்ஞான ஒன்றியத்தின் தலைவர் தி.கோபிநாத் அவர்களது ஒழுங்கமைப்பிலும் வரவேற்புரயுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர்’ எஸ்.ரங்கநாதன்,மற்றும் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் அ.ஆனந்த, விஷேடஅதிதிகளாக நாவிதன்வெளி இலங்கை வங்கி முகாமையாளர் கு.சசிதரன், அதிபர்களான நா.பிரபாகர்,மு.இராஜகோபால்,இ.முரளிதரன் உட்பட பலர் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது