மன்னாரில் 17.12.2021 வெள்ளிக்கிழமை 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்படும் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை (17.12.2021) 7 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதிபடுத்த்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் நானாட்டான் வைத்தியசாலையில் 3 பேரும், பேசாலை வைத்தியசாலையில் 2 நபர்களும், எருக்கலம்பிட்டி மற்றும் முருங்கன் வைத்தியசாலைகளில் தலா ஒருவருமே இவ்விடங்களில் கொவிட் தொற்றாளர்களாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் எண்ணிக்கையுடன் மன்னாரில் டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 215 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

ஆரம்பம் முதல் மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 3148 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் தடுப்பூசியானது முதலாவது தடுப்பூசி 81170 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 75280 பேருக்கும். பூஸ்டர் 11926 பேருக்கும், பாடசாலை மாணவர்களுக்கு 5674 பேருக்கும் மற்றும் குறிப்பிட்ட வயதுடைய பாடசாலையிலிருந்து இடை விலகியுள்ளவர்களுக்கு 1308 பேருக்கும் இவ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ரி.வினோதன் நாளாந்தம் வெளியிடும் கொவிட் தொடர்பான தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.