வீதியில் கண்டெடுத்த பெறுமதியான தங்க நகைகளை மீள ஒப்படைத்த இளைஞனுக்கு பாராட்டு

த.சுபேசன்
யாழ்ப்பாணம்-அரியாலைப் பகுதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் தவறவிடப்பட்ட 40இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைப் பையை மீளவும் உரியவரிடம் சென்றடைய வழிவகுத்த தென்மராட்சி இளைஞனுக்கு 15/12 புதன்கிழமை காலை வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து கௌரவமளிக்கப்பட்டது.
தென்மராட்சி-வரணி பகுதியைச் சேர்ந்த 21வயதான சியானீஸ் மதுசன் என்ற இளைஞனே இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.கௌரவிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மதுசனை கௌரவித்திருந்தனர்.