எமது Lift Ngo நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Transparency International Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டம்ஊழலற்ற எதிர்கால சமுதாயம் எனும் தூரநோக்கைக் கொண்டதாகும்.
இதற்கமைய மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமை தொடர்பான இரண்டு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன.
எமது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன் அவர்களது தலைமையிலும், எமது திட்ட உத்தியோகத்தர் திரு. தயாநிதி அவர்களது ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் Transparency International Sri Lanka நிறுவனத்தின் சமூகத்துறைக்கான கிளைத்தலைவர் திரு. கெளரீஸ்வரன்,மற்றும் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் திருமதி.பிரியா போல்ராஜ் ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றினர்.